Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு இலட்சத்து 50ஆயிரத்தைக் கடந்தது.

Tamil Business Directory

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் கொவிட்-19 தொற்றினால் எட்டு இலட்சத்து 52ஆயிரத்து 269பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், 21ஆயிரத்து 762பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 752பேர் பாதிக்கப்பட்டதோடு 39பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 30ஆயிரத்து 677பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 556பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இதுவரை ஏழு இலட்சத்து 99ஆயிரத்து 830பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.