Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10ஆயிரத்தைக் கடந்தது.

Tamil Business Directory

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் மொத்தமாக வைரஸ் தொற்றினால் 10ஆயிரத்து 32பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 30ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை இரண்டு இலட்சத்து 25 ஆயிரத்து 586பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், கனடாவில் வைரஸ் தொற்றினால் இரண்டாயிரத்து 699பேர் பாதிக்கப்பட்டதோடு, 31பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 26ஆயிரத்து 687பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 88ஆயிரத்து 867பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில் 232பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.