Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை நெருங்குகின்றது.

Tamil Business Directory

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் நான்கு இலட்சத்து 95ஆயிரத்து 446பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 14ஆயிரத்து 040பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 708பேர் பாதிக்கப்பட்டதோடு 124பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 75ஆயிரத்து 695பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 676பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், நான்கு இலட்சத்து ஐந்தாயிரத்து 611பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.