Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், இதுவரை 3,500இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Tamil Business Directory

கடந்த 24 மணித்தியாலங்களில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 175பேர் உயிரிழந்ததோடு, 1,653பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஒட்டுமொத்த நிலவரப்படி, கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 56,714பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 3,566ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், 29,347பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 23,801பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 557பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.