Reading Time: < 1 minute

கனடாவில் தனது இரண்டு பிள்ளைகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரை நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது.

Tamil Business Directory

கியூபெக் மாகாணத்தின் Laval நகரில் வசித்து வந்த கமல்ஜீத் அரோரா (49) என்பவரின் வீட்டில், 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அவரது 11 வயது மகனும் 13 வயது மகளும் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில், தனது இரண்டு பிள்ளைகளையும் அரோரா கொலை செய்ததாகவும், மேலும் தனது மனைவி ராமா ராணி அரோராவையும் மூத்த மகள் ஜாஸ்மினையும் கொலை செய்ய முயன்றதாகவும் அவர்மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது, அரோரா குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், 2020ஆம் ஆண்டு முதல் அவர் கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், திட்டமிட்டு இந்த கொலைகளை செய்யவில்லை என்றும் அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

இவ்வாறான வாதங்களை பரிசீலித்த பின்னர், அரோரா குற்றவாளி என நீதிமன்றம் தற்போது தீர்மானித்துள்ளது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில், அவருக்கு ஜாமீன் கிடைக்காத வகையில் சுமார் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.