Reading Time: < 1 minute

அரசாங்கம் மக்களுக்கு அனுப்பி வைத்த காசோலைகள் காசோலைகளை பணமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamil Business Directory

கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் 200 டாலர்கள் பெறுமதியான காசோலைகளை மக்களுக்கு வழங்கியிருந்தது.

தபால் மூலமாக இந்த காசோலைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்த காசோலைகளை சில வங்கிகளில் பணமாக்க முடியவில்லை என முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஆர்.பி.சி மற்றும் ரீ.டி ஆகிய வங்கி வாடிக்கையாளர்களுக்கு தங்களது காசோலைகளை பணமாக்கிக் கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டதாக குறித்த வங்கிகள் அறிவித்துள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரிங்களுக்காக வருந்துவதாக குறித்த வங்கிகள் தெரிவித்துள்ளன.

பணவீக்கம், வட்டி வீத பிரச்சனை போன்ற ஏதுக்களை கரத்தில் கொண்டு மாகாண அரசாங்கம் இவ்வாறு 200 டாலர் உதவு தொகை ஒன்றை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மாகாண அரசாங்கத்திற்கு வரி செலுத்துவோருக்கு இந்த உதவுதொகை வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.