Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் டர்ஹம் பொவ்மான்வில் பகுதியில் மர்மான முறையில் உயிரிழந்த இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பொவ்மென்வெலி அவன்யூவின் கோர்ம்பின் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் இரண்டு சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த இரு சடலங்கள் தொடர்பிலான பிரேதப் பரிசோதனை நடாத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் பொலிஸாருடன் பகிர்ந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.




