கனடாவின் உள்விவகாரங்களில் இந்தியா ஒருபோதும் தலையீடு செய்யவில்லை என்று கனடாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகர் தினேஸ் கே் பாட்நாயக் உறுதியாக தெரிவித்துள்ளார்.
மும்பையில் இடம்பெற்ற ஒரு நிகழ்வின் போது ஊடகங்களிடம் பேசிய அவர், கனடாவில் வெளிநாட்டு தலையீடு தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்கையில், “இது நடந்ததே இல்லை” என்று தெளிவாகக் கூறினார்.
இந்த கருத்து, பிரதமர் மார்க் கார்னியின் இந்தியா பயணத்தை முன்னிட்டு, இந்தியா இனி கனடாவின் உள்விவகாரங்களில் செயற்படவில்லை என்ற வகையிலான கருத்துக்கள் வெளியாகிய பின்னணியில் வெளிவந்தது.
ஆனால், “இது இனி நடைபெறவில்லை என்ற கேள்வியே இல்லை; அது ஒருபோதும் நடந்ததே இல்லை” என்று பட்நாயக் வலியுறுத்தினார்.
கனடாவில் வெளிநாட்டு தலையீடு தொடர்பான கசரினைகள் கனடா தானே தீர்க்க வேண்டிய உள்நாட்டு பிரச்சினையாகும் என்றும், அந்த செயல்முறையில் இந்தியா உதவ தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கனடா மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆலோசகர்களுக்கிடையில் நடைபெற்ற அண்மைய சந்திப்புகள் பல தவறான புரிதல்களை நீக்க உதவியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன் மூலம், கனடாவின் உள்விவகாரங்களில் இந்திய தலையீடு குறித்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுபடியும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.