Reading Time: < 1 minute

ஒன்றாரியோவைத் தொடர்ந்து பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் புதிய ரக கொரோனா வைரஸ் தொற்று அடையாளங் காணப்பட்டுள்ளது

Tamil Business Directory

சமீபத்தில் பிரித்தானியாவிலிருந்து கனடாவுக்கு வந்த இருவரில் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ தனது முதல் இரண்டு தொற்றுக்களை சனிக்கிழமை இரவு தெரிவித்த பின்னர், மூன்றாவது தொற்று ஒட்டாவாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின், தீவுத் சுகாதார பிராந்தியத்தில் ஒரு மனிதர் வைரசின் புதிய திரிபுக்குச் சாதகமாகச் சோதனை செய்ததாக அறிவித்தது.

அந்த நபர் டிசம்பர் 15ஆம் திகதி ஏசி 855 விமானத்தில் பிரித்தானியாவிலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு திரும்பியிருந்தார். தனிமைப்படுத்தலில் இருக்கும்போது அறிகுறிகள் ஏற்பட்ட பிறகு அவர் பரிசோதனை செய்துக் கொண்டார்.