Reading Time: < 1 minute

கனடாவின் அன்றாடிய மாகாணத்தில் எரிபொருள் விலையில் மாற்றம் பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது

Tamil Business Directory

எதிர்வரும் இரண்டு தினங்களில் பெற்றோலின் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 8 சதங்களினால் குறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் இரண்டு நாட்களில் இந்த விலை வீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

நாளைய தினம் நான்கு சதங்களினாலும் நாளை மறுதினம் நான்கு சதங்களினாலும் எரிபொருள் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதத்தில் எரிபொருட்களின் விலை மாகாணத்தில் உயர்வடைந்து காணப்பட்டது.

எதிர்வரும் இரண்டு நாட்களில் சிறிதளவு எரிபொருளின் விலை குறைந்தாலும் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலை அதிகரிக்கும் எனவும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இரண்டு டாலர்களை எட்டும் எனவும் துறை சார் நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கம் மாகாண அரசாங்கம் எரிபொருள் வரியை மறுசீரமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.