Reading Time: < 1 minute
Tamil Business Directory
முன்பை விட அதிக வேகத்தில் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ள புதிய ரக கொரோனா வைரஸ் தொற்று, ஒன்ராறியோவில் அடையாளங் காணப்பட்டுள்ளது.
டர்ஹாமில் உள்ள ஒரு தம்பதியினருக்கு இந்த தொற்று உறுதியாகியுள்ளதாக, மாகாணத்தின் சுகாதார முதன்மை மருத்துவ அதிகாரி பார்பரா யாஃப் தெரிவித்துள்ளார்.
இது ஒன்றாரியர்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டியதன் அவசியத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
மேலும், மாகாண அளவிலான பொதுமுடக்க நடவடிக்கைகள் உட்பட அனைத்து பொது சுகாதார ஆலோசனைகளையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று யாஃப் கூறுகிறார்.




