Reading Time: < 1 minute

கொக்கெய்ன் உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தல் மற்றும் பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றமை உள்ளிட்ட சந்தேகங்களின் அடிப்படையில், ஒட்டாவா, நயாகரா மற்றும் சட்பரியில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil Business Directory

இவர்கள் மீது நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு விசாரணைகளை அடுத்து, கடந்த வாரத்தில் குறித்த இந்த நகரங்கள் அனைத்திலும் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்களை பொலிஸார் நடத்தினர். இதன்போது 15 பேர்கொண்ட குழுவினர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஒரு மில்லியன் டொலர்களுக்கும் மேலான பெறுமதி உடைய 12.5 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப் பொருள் உள்ளிட்ட மேலும் பல போதைப் பொருட்கள் மற்றும் மாத்திரைகளைக் கைப்பற்றினர்.

இந்த நிலையில் அவர்களை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் இந்த விடயம் தொடர்பாக மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.