Reading Time: < 1 minute

சமீபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில், கனடா பொது சுகாதாரத்துறையின் மூத்த அலுவலர்கள் மீண்டும் மாஸ்க் அணிந்தபடி பங்கேற்றனர்.

Tamil Business Directory

செவ்வாய்க்கிழமை நடந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது, கனடா பொது சுகாதாரத்துறையின் மூத்த அலுவலர்கள் மாஸ்க் அணிந்தபடி, சமூக இடைவெளியையும் பின்பற்றியபடி பங்கேற்றனர்.

எதனால் மாஸ்க் அணிந்துள்ளீர்கள் என தலைமை பொது சுகாதார அலுவலர் Dr. தெரஸாவிடம் (Dr. Theresa Tam) கேட்டபோது, கடந்த சில நாட்களாக கோவிட் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், தனது சகப் பணியாளர்கள் சிலருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது மீண்டும் மாஸ்க் அணியத்துவங்குவதற்கான நேரம் என்று கூறிய Dr. தெரஸா, மாஸ்க் பாதுகாப்பளிக்கக்கூடிய ஒரு விடயம். சுவாசக்கோளாறுகளை உருவாக்கும் வைரஸ்கள் பரவும் காலகட்டத்தில், தேவைப்படும்போது மாஸ்க் அணியும் பழக்கம் மக்களிடம் தானாகவே வந்துவிட்டது என்று கருதுகிறோம். கோவிடுக்காக மட்டுமல்ல, பிற சுவாசக் கோளாறுகளை உருவாக்கும் நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் மாஸ்க் உதவியாக இருக்கும் என்றார்.

உங்களிடம் மாஸ்க் இல்லையென்றால், அவற்றை தயார் செய்வதற்கான நேரம் இது என்று நான் கருதுகிறேன் என்கிறார் அவர்.