Reading Time: < 1 minute

உலகின் மிகப் பழமையான மற்றும் பிரபலமான வைரங்களில் ஒன்றான புளோரென்டைன் வைரம் , நூறு ஆண்டுகளுக்குப் பின் , கனடாவில் உள்ள ஒரு வங்கி பெட்டகத்தில் பத்திரமாக இருப்பது தெரியவந்துள்ளது

Tamil Business Directory

புளோரென்டைன் வைரம் என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும் . நூற்று முப்பத்து ஏழு . இருபத்து ஏழு காரட் எடையில் வெளிர் மஞ்சள் நிறத்தில் , நூற்று இருபத்து ஆறு முகங்கள் கொண்ட இரட்டை ரோஜா வடிவத்தில் , பட்டை தீட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க வைரமாகும் . இந்த வைரம் பதினைந்து – ம் நுாற்றாண்டு முதல் பல ஐரோப்பிய அரச குடும்பங்களிடம் இருந்துள்ளது

இத்தாலியின் புளோரன்ஸ் நகரத்தை ஆண்ட மெடிசி குடும்பம் மற்றும் ஆஸ்திரியாவின் ஹப்ஸ்பர்க் வம்சத்தின் வசம் இருந்துள்ளது . முதல் உலகப் போரின் முடிவில் ஆஸ்திரியா – – ஹங்கேரி பேரரசு சரிந்தபோது , கடைசி பேரரசர் முதலாம் சார்லஸ் மற்றும் பேரரசி ஜீட்டா , தங்களுடைய ஆபரணங்களை பாதுகாக்க சுவிட்சர்லாந்துக்கு அனுப்பினர்

அதன்பின் , இந்த வைரம் காணாமல் போனதாகவும் , திருடப்பட்டதாகவும் , பல துண்டுகளாக வெட்டப்பட்டதாகவும் ஏராளமான கதைகள் சொல்லப்பட்டன . ஆனால் , இரண்டாம் உலகப் போரின்போது , ஜெர்மனியின் நாஜி படைகளிடம் இருந்து தப்பி , வட அமெரிக்க நாடான கனடாவுக்கு வந்த பேரரசி ஜீட்டா , இந்த வைரத்தையும் மற்ற ஆபரணங்களையும் ஒரு சிறிய சூட்கேசில் எடுத்து வந்து , வங்கி பெட்டகத்தில் வைத்தார்

பாதுகாப்புக்காக , இந்த ரகசியத்தை தன் இரு மகன்களிடம் மட்டும் சொல்லி , பேரரசர் சார்லஸ் இறந்து நூறு ஆண்டுகள் வரை வெளியில் சொல்லக் கூடாது என , சத்தியம் வாங்கியதாகக் கூறப்படுகிறது . தற்போது நூறு ஆண்டுகள் முடிந்த நிலையில் , ஹப்ஸ்பர்க் வம்ச வாரிசுகள் இந்தத் தகவலை வெளியிட்டனர் . கனடா தங்கள் குடும்பத்தை போர்க்காலத்தில் அடைக்கலம் கொடுத்ததற்கு நன்றியாக , இந்த வைரத்தையும் மற்ற ஆபரணங்களையும் கனடா அருங்காட்சியகத்தில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இந்த வைரத்தின் மதிப்பு , பத்தொன்பதாம் நுாற்றாண்டிலேயே பன்னிரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இருந்த நிலையில் , தற்போதைய மதிப்பு வெளியிடப்படவில்லை . இந்திய வைரத்துக்கு இத்தாலி பெயர் புளோரென்டைன் வைரம் என்று அழைக்கப்படுவதற்கு முக்கிய காரணம் , இது இத்தாலியின் புளோரன்ஸ் நகரை ஆண்ட மெடிசி குடும்பத்தினரின் சொத்தாக நீண்ட காலம் இருந்தது தான் . ஆயிரத்து எழுநூற்று முப்பத்து ஏழில் மெடிசி குடும்பத்தின் கடைசி ஆண் வாரிசு இறந்த பின் , இளவரசி மரியா தெரேசாவின் திருமணம் மூலம் இது ஆஸ்திரியாவின் ஹப்ஸ்பர்க் அரச குடும்பத்துக்கு சென்றது.