Reading Time: < 1 minute

பிரித்தானிய மகாராணியின் செல்லப்பேரனின் விவாகரத்து விவகாரம் அவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

Tamil Business Directory

மகாராணியாரின் மகள் இளவரசி ஆனின் மகன் இளவரசர் பீற்றர் பிலிப்ஸ் (வயது-42), சமீபத்தில் சீனத் தொலைக்காட்சி ஒன்றில் பால் விளம்பரம் ஒன்றில் நடித்ததால் சர்ச்சையில் சிக்கினார்.

உண்மையில் அவர் மக்களின் வரிப்பணத்தைப் பெற்றுக்கொள்ளாமல் தனது வருவாய்க்காக பல்வேறு வகையில் வேலை செய்கிறார். அவற்றில் ஒன்று தங்கள் திருமணப் படங்களை பிரபல பத்திரிகை ஒன்றிற்கு வழங்கி பணம் பெற்றுக்கொண்டார்.அதற்காகவும் அவர் மீது விமர்சனம் வந்தது.

இந்நிலையில், திடீரென 41 வயதான அவரது மனைவி ஓற்றம் பிலிப்ஸ் (Autumn Phillips) விவாகரத்துக் கோரியுள்ளார். இந்த விடயம் மகாராணியாருக்கு மட்டுமல்லாது பீற்றருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, எதற்காக ஓற்றம் பிலிப்ஸ் விவாகரத்து கோரியுள்ளார் என்பது தெரியவில்லை.

விவாகரத்துக்குப்பின்னர் கனடாவை சொந்த இடமாகக் கொண்ட ஓற்றம் பிலிப்ஸ் தனது பிள்ளைகளுடன் கனடாவில் சென்று குடியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, இதற்கு முன்னர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த் ஹரி, மேகன் தம்பதி கனடாவில் குடியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.