Reading Time: < 1 minute

இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இளவரசி ஆன் இலங்கை வந்தடைந்தார்.

Tamil Business Directory

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பும் அளிக்கப்பட்டது.

இளவரசியுடன் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் டிம் லோரன்ஸ் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்போது பிரித்தானிய இளவரசி ஆன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் கொழும்பில் தங்கிருந்து தொண்டு நிறுவனங்களை சந்திக்கவுள்ள அவர், குழந்தைகள் சேவ் ஸ்ரீலங்கா திட்டத்தையும் பார்வையிடவுள்ளார்.

இதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு செலும் இளவரசி ஆன், சிவில் சமூக பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.