Reading Time: < 1 minute

இலங்கைக்கு சென்ற கனடா நாட்டு சிறார்கள் இருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படும் சுற்றுலா வழிக்காட்டி ஒருவரை தேடி இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

கனடாவை சேர்ந்த 16 வயதான சிறுமியும் ,சிறுவனும் அவர்களது, தந்தையுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

சுற்றுலாவழிகாட்டியின் மோசமான செயல்
சுற்றுலாவின் போது, கொஸ்கொடையில் இருந்து காலி கோட்டையை பார்வையிடுவதற்காக வேனில் பயணித்துள்ளனர்.

இதன்போது இரண்டு சிறுவர்களையும் சுற்றுலா வழிகாட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இநிலையில் சம்பவம் தொடர்பில் , தப்பிச் சென்றுள்ள சந்தேகநபரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.