Reading Time: < 1 minute

மூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த இந்தியாவின் நிதி அமைச்சர் ‘நிர்மலா சீதாராமன்‘ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

Tamil Business Directory

இதன்போது யாழில் நடைபெற்ற புதிய தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு வர்த்தக கண்காட்சியை பார்வையிட்ட அவர் அதன் பின்னர் யாழ். நூலகம் மற்றும் நல்லூர் ஆலயத்திற்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அத்துடன் இந்திய ஸ்டேட் வங்கியின் (SBI) யாழ்ப்பாண கிளையின் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நிதி அமைச்சர் ‘நிர்மலா சீதாராமன் இன்று நாடு திரும்பினார்.