Reading Time: < 1 minute

கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடுங்குளிரில், உறைபனியில், நடந்தே நுழைய முயன்று, ஒரு குடும்பமே பனியில் உறைந்து இறந்துகிடந்த சம்பவம் மூன்று நாடுகளை அதிரவைத்த விடயம் நினைவிருக்கலாம்.

Tamil Business Directory

இந்நிலையில், அந்தக் குடும்பத்தை அமெரிக்காவுக்குள் கடத்த உதவிய நபர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 19ஆம் திகதி, இந்தியாவின் குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலி (37) மகள் விஹாங்கி (13) மற்றும் மகன் தார்மிக் (3) ஆகியோர் அடங்கிய குடும்பம் அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, கனடா அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக பலியானது.

அந்தக் குடும்பத்தை கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடத்த உதவியவர்களில் ஒருவர், Fenil Patel என்பவர் ஆவார்.

அந்த சம்பவம் தொடர்பில் இந்த நபர் மீது இந்தியாவிலும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Fenil Patel, அமெரிக்கா, அல்லது கனடாவில் ரொரன்றோ, Ottawa மற்றும் வான்கூவர் முதலான இடங்களில் ஏதாவது ஒன்றில் இருக்கலாம் அல்லது தப்பியோடியிருக்கலாம் என இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.