Reading Time: < 1 minute

பிரித்தானிய அரச குடும்பத்தின் கடமைகளிலிருந்து விலகி ஒரு புதிய வாழ்க்கைக்குத் தயாராகின்ற நிலையில் இளவரசர் ஹரி கனடாவுக்கு வந்துள்ளார்

Tamil Business Directory

இளவரசர் ஹரி இன்று செவ்வாய்க்கிழமை காலை வன்கூவர் தீவில் தனது மனைவி மேகன் மற்றும் அவர்களது எட்டு மாத மகன் ஆர்ச்சியுடன் மீண்டும் இணைந்தார்.

அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் நிலையில் இருந்து பின்வாங்குவதைத் தவிர உண்மையில் தனக்கு வேறு வழியில்லை என்று தெரிவித்திருந்த ஹரி, எதிர்வரும் வசந்த காலத்தில் இருந்து அரச குடும்பத்தின் முழுநேர வேலை செய்யும் பொறுப்பில் இருந்து நீங்குகிறார்.

ஹரி மற்றும் மேகன் ஆகியோர் HRH பட்டங்களைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடுவதுடன் அரச கடமைகள் அல்லது ராணுவ நிகழ்வுகளில் கலந்துகொள்ளமாட்டார்கள். அத்துடன் இனி ராணியை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணி மற்றும் ஹரியின் மூத்த சகோதரர் இளவரசர் வில்லியம் உள்ளிட்ட மூத்த உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை புதிய ஏற்பாடு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது.