Reading Time: < 1 minute

அமெரிக்காவில் பல தசாப்தங்களாக வசித்து வந்த கனடா பிரஜை ஒருவர், அந்நாட்டுத் தேர்தல்களில் சட்டவிரோதமாக வாக்களித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

போஸ்டன் அமெரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் தகவலின்படி, 40 வயதான குறித்த நபர் மீது, வெளிநாட்டவர் ஒருவர் சட்டவிரோதமாக வாக்களித்தமை மற்றும் போலியானது என்று தெரிந்தே வாக்குச்சீட்டைப் பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் போஸ்டன் நகருக்கு வடக்கே உள்ள சாகஸ் (Saugus, Massachusetts) பகுதியில் வசித்து வந்த இவர், 1987ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க நிரந்தர வதிவிட உரிமையைப் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், அதிகாரப்பூர்வ வாக்காளர் பதிவுப் படிவங்களில் தன்னை அமெரிக்கப் பிரஜை என பொய்யாகக் குறிப்பிட்டு, பல அமெரிக்க கூட்டாட்சித் தேர்தல்களில் வாக்களித்ததாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 1 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 100,000 அமெரிக்க டாலர் முதல் 250,000 அமெரிக்க டாலர் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ஒன்லைன் நீதிமன்றப் பதிவுகளின்படி, குறித்த நபர் வரும் ஜூன் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.