Reading Time: < 1 minute

ஸ்காப்ரோவில் கடந்த வாரம் கடத்தப்பட்ட பெண்ணை தேடிக் கண்டு பிடிப்பதற்கு பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது.

Tamil Business Directory

றொரன்டோ பொலிஸார் குறித்த பெண் கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கில்ட்வுட் பார்க்வே மற்றும் கிங்ஸ்டன் வீதிக்கு அருகாமையில் நடந்து சென்றிருந்த வேளையில் நபர் ஒருவர் வாகனத்தில் குறித்த பெண்ணை வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணை வழி மறித்து கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை.

இந்தப் பெண் பற்றிய ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் அது பற்றி அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

சீ.சீ.ரீ.வ காணொளிகள் அல்லது வாகன டேஸ் கமராக்கள் போன்றவற்றில், இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் அதனை 416-808-4300 அல்லது 416-222-TIPS (8477) என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.