Reading Time: < 1 minute

கனடாவின் வடக்கு வின்னிபெக் பகுதியில் மர்மான முறையில் தீயில் கருகி இரண்டு பெர் கொல்லப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

இந்த தீ விபத்து ஓர் படுகொலை சம்பவமாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் இருவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

49 வயதான கேடா வாடிஸ்கோ மற்றும் 38 வயதான ஸெனாபு குலா ஆகிய இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சனிக்கிழமை அதிகாலை 2:49 மணி அளவில் தீ விபத்து சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதாகவும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ மூட்டல் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.