Reading Time: < 1 minute
Tamil Business Directory
லட்வியாவில் கடமையாற்றி வந்த கனடிய படைவீரர் கொல்லப்பட்டுள்ளார்.
லட்வியாவின் தலைநகர் ரிகாவில் இந்த படைவீரர் உயிரிழந்துள்ளார். ஆரோன் வைட்மேன் என்ற கனடிய படைவீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வைட்மேன் எவ்வாறு உயிரிழந்தார் என்பது பற்றிய விபரங்களை கனடிய இராணுவம் வெளியிடவில்லை.
லட்வியாவில் நேட்டோ அமைதி காக்கும் படையணியில் வைட்மேன் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ரஸ்யாவின் அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த நேட்டோ படை லட்வியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.




