Reading Time: < 1 minute

ரொறன்ரோ டவுன்ரவுன் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் காயங்களுடன் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

உயிரிழந்தவர் 50 வயதான றொபின் பெஸ்டியோ எனவும், அவருக்கு நிலையான முகவரி இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24ஆம் திகதி முற்பகல் 11:40 அளவில், யோங் வீதி மற்றும் இஸ்சபெல்லா வீதிப் பகுதியில் அமைந்துள்ள ஜோர்ஜ் ஸிஸ்லொப் பூங்காவில் இருந்து, மீட்கப்பட்ட இவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், குறித்த பூங்காவில் செவ்வாய்க்கிழமை காலை மற்றும் முற்பகல் வேளைகளில் இருந்தோர் தம்மைத் தொடர்பு கொள்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் மனிதக் கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினர், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.