Reading Time: < 1 minute
Tamil Business Directory
மாணவர்கள் மீது மனிதக் கழிவை வீசியதாக தெரிவிக்கப்படும் ஒருவரை ரொறன்ரோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரொறன்ரோவில் கடந்த வெள்ளி மற்றும் திங்கட் கிழமைகளில் நடைபெற்ற மூன்று தனித்தனியான சம்பவங்களில் திரவ மனிதக் கழிவை மாணவர்கள் மீது எறிந்ததாக சந்தேகநபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரொறன்ரோவைச் சேர்ந்த சாமுவேல் ஓபோகு என்ற குறித்த சந்தேகநபர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியளவில் குயின் ஸ்ட்ரீற் வெஸ்ற் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேகநபர் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று காலை 10 மணிக்கு ரொறன்ரோ நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.




