Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோ கிழக்குப் பகுதியில் தகாத செயலில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Tamil Business Directory

குறித்த நபர் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வீதிகளுக்கு அருகாமையில் கடந்த ஜூலை மாதம் 3ம் திகதி இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பாதையில் நடந்து சென்ற பெண் ஒருவரை குறித்த நபர் இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க ஐந்து அடி பத்து அங்குலம் உயரமான நபர் ஒருவர் இந்த குற்றச்செயலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நபர் ஒர் கருப்பினத்தவர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நபர் தொடர்பிலான தகவல்கள் ஏதேனும் இருந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.