Reading Time: < 1 minute

ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் வைத்து வாகனம் ஒன்றினால் மோதுண்ட இரண்டு வயதுச் சிறுவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

Queen Street Westற்குத் தெற்கே, Richmond Street West மற்றும் Simcoe Street பகுதியில் நேற்று இரவு 7:30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த அந்தச் சிறுவன் தனது தாயாருடன் வீதியைக் கடந்து கொண்டிருந்த போது, அந்த வீதிச் சந்திப்புப் பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ட்ரக் ரக வாகனம் சிறுவன் மீது மோதியதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தின் போது குறித்த அந்தச் சிறுவன் பகுதியளவில் வாகனத்தின் கீழ் சிக்குண்டதாக கூறப்படுகிறது.

சிறுவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சை பெற்றுவரும் அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ரொரன்ரோ காவல்துறையினர், அவதானக் குறைவாக வாகத்தைச் செலுத்தியதாக குறித்த அந்த வாகனத்தின் சாரதி மீது குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.