Reading Time: < 1 minute

மார்க்கம் பகுதியில் நேற்று பிற்பகல் வேளையில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஆண் உந்துருளி ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

எஸ்னா பார்க் ட்ரைவ் மற்றும் அல்டென் வீதிப் பகுதியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்த விபத்து சம்பவித்ததனை யோர்க் பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சிறிதளவு விபரங்களை மட்டுமே வெளியிட்ட காவல்துறையினர், விசாரணைகளுக்காக வீதி மூடப்பட்டிருக்கும் என்று சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தின் பின்னர் தகவல் வெளியிட்டபோது தெரிவித்திருந்தனர்.

இந்த விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அவரது வயது, பெயர் உள்ளிட்ட விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இந்த விபத்து சம்பவித்த வேளையில் அதனை நேரில் பார்த்தோர் இருந்தால் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.