Reading Time: < 1 minute
Tamil Business Directory
Durham பிராந்தியத்தில் நீடிக்கப்பட்ட 407 நெடுஞ்சாலையின் பகுதி, 418 நெடுஞ்சாலை ஆகியன, பொதுமக்களின் பாவனைக்காக இன்று திறக்கப்பட்டுள்ளன.
14 கிலோமீற்றர்கள் நீடிக்கப்பட்ட 407 நெடுஞ்சாலை, 35 மற்றும் 115 நெடுஞ்சாலைகளை இணைப்பதுடன், Peterboroughவுக்கான பயணத்தை இலகுவாக்குகின்றது.
அதேவேளை, 10 கிலோமீற்றர்கள் நீளமான 418 நெடுஞ்சாலை, 401 நெடுஞ்சாலையையும், 407 நெடுஞ்சாலையையும் இணைக்கிறது.
ஒண்டாரியோ மாகாணத்தை, வர்த்தகத்துக்காகவும் வேலை வாய்ப்புக்களுக்காகவும் திறக்கப்பட்டிருக்க, இந்த முதலீடுகள் உதவியாக இருக்குமென, மாகாண உட்கட்டமைப்பு அமைச்சர் லோறி ஸ்கொட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.




