தென்னாப்பிரிக்காவின் பிரபலமான Kruger தேசிய பூங்காவில் சுற்றுலா சென்ற 69 வயதுடைய கனேடியர் ஒருவர், துப்பாக்கி தவறுதலாக வெடித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் புதன்கிழமை மாலை, Kruger National Park-இன் Phabeni Gate அருகே உள்ள தனியார் concession-operated “bush braai” சுற்றுலா இடத்தில் இடம்பெற்றதாக தென்னாப்பிரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்த கனேடியர், பூங்காவிற்கு வெளியே தங்கியிருந்த சுற்றுலா குழுவில் ஒருவராக இருந்துள்ளார். அவர்கள், செல்லுபடியாகும் அனுமதியுடன் பூங்காவிற்குள் நடத்தப்பட்ட தனியார் bush braai நிகழ்வில் பங்கேற்க வந்திருந்ததாக SANParks தெரிவித்துள்ளது.
முதற்கட்ட தகவலின்படி, அந்த குழுவுடன் இருந்த தனியார் வழிகாட்டி ஒருவர் கையில் துப்பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த துப்பாக்கி உண்மையானதா என்று கனேடிய சுற்றுலாப் பயணி கேட்டபோது, வழிகாட்டி அதை விளக்கிக் காட்டியதாகவும், அப்போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி வெடித்ததில் கனேடிய சுற்றுலாப் பயணி கடுமையாக காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 36 வயதுடைய தனியார் வழிகாட்டி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாகவும் தென்னாப்பிரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
SANParks, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. இந்த துயர சம்பவத்தின் முழு சூழ்நிலை தொடர்பாக தென்னாப்பிரிக்க பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த கனேடியரின் பெயர் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.





Comments are closed, but trackbacks and pingbacks are open.