Reading Time: < 1 minute

டொரொன்டோவின் North York பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்த 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக டொரொன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8:15 மணியளவில், Jane Street மற்றும் Chalkfarm Drive பகுதியில் உள்ள கட்டிடத்தில் இருந்து ஒருவர் கீழே விழுந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து அவசர சேவையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு சென்ற அதிகாரிகள், 6 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டறிந்தனர். அவர் படுக்கையறை ஜன்னலில் இருந்து விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற்கூறு பரிசோதனை அறிக்கை கிடைத்த பின் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட தகவல்களின் படி, இது சந்தேகத்திற்கிடமான சம்பவமாக கருதப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.