Reading Time: < 1 minute

டொரன்டோவில் போக்குவரத்து நெரிசல் நிலைமைகள் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamil Business Directory

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

வாகன போக்குவரத்து நெரிசல் நிலைமையானது நகரின் பொருளாதாரத்தை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டொரன்டோவின் பிராந்திய வர்த்தக சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

வாகன போக்குவரத்து நெரிசல் நிலைமைகளினால் பெரும் எண்ணிக்கையிலான ஊழிய படையினர் மேலும் பகுதிகளுக்கு இடம்பெயர திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பணிக்காக பயணங்களை மேற்கொள்வதற்கு விரும்பவில்லை என டொரன்டோவை சேர்ந்த 62 விதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகன போக்குவரத்து நெரிசல் நிலைமைகள் காரணமாக அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக டொரன்டோ நகர மக்கள் வருத்தம் வெளியிட்டுள்ளனர்.

வர்த்தக நிலையங்களுக்குச் செல்லுதல், விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு தயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

31 வீதமான மக்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து நெரிசலின் அடிப்படையில் மக்களின் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் வருமானத்திலும் தொழில்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.