Reading Time: < 1 minute

கடந்த வருடம், க்யூபெக் மாகாணத்தில் ஒரு நோயாளர் அவசர மருத்துவ சேவையைப் பெற சராசரியாக 5 மணி நேரம் 23 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது என மொன்றியல் எகனோமிக் இன்ஸ்டிடியுட் Montreal Economic Institute (MEI) வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

“இந்த நீண்ட காத்திருப்பு நேரங்கள் வெறும் எண்ணிக்கைகள் அல்ல. அவை அவசர சிகிச்சைக்காக காத்திருக்கும் கனடியர்களின் வலியும் அவதிப்பாடும் ஆகியவை,” என பொருளாதார நிபுணர் எமானுவெல் பி. ஃபோபர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு அறிக்கையை எமானுவெல் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐந்தாண்டுகளில் நாடு முழுவதிலும் இந்த நிலை மோசமடைந்துள்ளதே நம்முடைய சுகாதார அமைப்புகள் நேரத்திற்குள் மருத்துவ சேவை வழங்க முடியாத நிலையை காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

அறிக்கையின் படி, 2024ஆம் ஆண்டு, க்யூபெக்கில் ஒரு நோயாளர் அவசர பிரிவில் சென்றபோது, முந்தைய ஆண்டைவிட சராசரியாக 10 நிமிடங்கள் கூடுதலாக காத்திருக்க வேண்டியிருந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இது ஒரு மணி நேரம் வரை அதிகரித்துள்ளது. மாகாணத்தின் சில பகுதிகளில் இந்த நிலை இன்னும் மோசமாக உள்ளது எனும் எச்சரிக்கையையும் ஃபோபர் விடுத்துள்ளார்.