Reading Time: < 1 minute

காசா முனையின் மீதான இஸ்ரேலின் கடற்படை முற்றுகைக்கு சவால் விடுத்து, அங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முயன்ற 12 கனடிய ஆர்வலர்கள் இஸ்ரேலியப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

இதனை இந்த விவகாரத்தை ஒருங்கிணைத்த ‘குளோபல் சுமுத் கனடா’ (Global Sumud Canada) என்ற ஆர்வலர் அமைப்பு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களை அரசாங்க அதிகாரிகள் இன்னும் பகிரங்கமாக அறிவிக்காத போதிலும், ‘குளோபல் சுமுத் கனடா’ அமைப்பு அவர்களின் விபரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மைக்கேல் பிரான்ஸ், ஒமர் ஷாபான், சபா செப்பி, செபாஸ்டியன் டோ, கோ தின்மாங், உமிர் தியார், ஷாஹித் மஹ்மூத், ஆடம் ஜோசுவா நோராட் பௌசைட், ஒலிவியர் ஹியூரார்ட், இஹாப் லோட்டயேஃப், மேரி கிரேஸ் மதிசென் மற்றும் டேனியலா-மரியா போனமிகோ ஆகிய 12 கனடியர்களே இவ்வாறு இஸ்ரேலியப் படைகளால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலியப் படைகளால் தாங்கள் கைது செய்யப்பட்டால், சிறைக்குள் அரசியல் ரீதியான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பதாக கனடிய ஆர்வலர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே முடிவு செய்திருந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.