Reading Time: < 1 minute

கனடாவின் Toronto நகரில் 14 வயது சிறுமி ஒருவர் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக காணாமல் போயுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Business Directory

எஸ்தர் (Esther) என்ற சிறுமி கடந்த மே 15ஆம் திகதி இரவு சுமார் 11:30 மணியளவில், Earl Bales Park அருகே கடைசியாகக் காணப்பட்டதாக Toronto Police Service தெரிவித்துள்ளது.

அவர் அங்கிருந்து வடகிழக்கு திசையை நோக்கி நடந்து சென்றதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

காணாமல் போயுள்ள எஸ்தர் சுமார் 5 அடி 2 அங்குல உயரம் கொண்டவர். நடுத்தர உடலமைப்புடன், பழுப்பு நிற முடி கொண்ட வெள்ளை இனச் சிறுமி என விபரிக்கப்பட்டுள்ளார்.

அவர் கடைசியாக அணிந்திருந்த உடைகள் குறித்தும் பொலிஸார் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். முன்பக்கத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீண்ட டர்க்காய்ஸ் (நீலப்பச்சை) நிறக் கைகள் கொண்ட ஸ்வெட்டர் மற்றும் கணுக்கால் பகுதியில் தளர்வாக இருந்த சாம்பல் நிற ஸ்வெட்பேண்ட்ஸ் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் காலணிகள் அணிந்திருந்தாரா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை.

செவ்வாய்க்கிழமை மதியம் Earl Bales Community Centre வெளியே ஊடகங்களிடம் பேசிய எஸ்தரின் தாய் ஷிரா (Shira), தனது மகளுக்கு கண்ணீருடன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“எஸ்தி, என் அன்பே… நீ இதைப் பார்த்துக் கொண்டிருந்தால் தயவுசெய்து வீட்டிற்கு வந்துவிடு. நாங்கள் உன்னை மிகவும் நேசிக்கிறோம். உன்னை இழந்து தவிக்கிறோம். உலகம் முழுவதும் உள்ள எங்கள் குடும்பத்தினர் உனக்காக பிரார்த்தனை செய்து தேடிக் கொண்டிருக்கிறார்கள். நீ எந்தத் தவறும் செய்யவில்லை. உன் மீது யாரும் கோபமாக இல்லை. நீ பாதுகாப்பாக இருக்கிறாய் என்று தெரிந்தாலே போதும். தயவுசெய்து யாரையாவது தொடர்புகொள் மகளே” என அவர் உணர்ச்சி வசப்பட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், எஸ்தர் மிகவும் அன்பான மற்றும் புத்திசாலித்தனமான சிறுமி என்றும் குறிப்பிட்டுள்ள அவர், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டு வாசல் கேமராக்கள் (Doorbell Cameras), வாகன Dashcam காட்சிகள் மற்றும் வணிக வளாகங்களின் CCTV பதிவுகளை சரிபார்த்து, ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக காவல்துறையினருக்கு வழங்குமாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.