Reading Time: < 1 minute

றொரண்டோவில் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில், பத்து ஆண்டுகள் கடந்த பின்னரும் குற்றவாளி கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மீண்டும் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Tamil Business Directory

2016 ஆம் ஆண்டு மே 15 அன்று, 35 வயதான கேண்டிஸ் ‘ரோஷல்’ பாப் (Candice ‘Rochelle’ Bobb) தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, John Garland Boulevard பகுதியில் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.

இந்த தாக்குதலுக்குப் பிறகு மருத்துவமனையில் அவசர சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பாதுகாப்பாகப் பிறக்கச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சில நிமிடங்களிலேயே கேண்டிஸ் உயிரிழந்தார். அவரது மகன் கைரி (Kyrie) மூன்று வாரங்கள் உயிர் போராட்டம் நடத்தி பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட தோட்டாக்கள் மூலம் புதிய டிஎன்ஏ மற்றும் விரல் அடையாள ஆய்வுகளை மேற்கொள்ளும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

இந்தக் கொலை வழக்கில் தகவல் வழங்குவோருக்கு அறிவிக்கப்பட்டுள்ள 50,000 டொலர் வெகுமதி, வரும் ஜூலை 1 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குற்றவாளியின் அடையாளம் தெரியாத வரை, நாங்கள் ஒரு நிழலைத் தேடுவது போன்ற நிலைதான்,” என றொரண்டோ பொலிஸின் Cold Case Unit அதிகாரி ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.