Reading Time: < 1 minute

கனடாவில் சிறைச்சாலையொன்றில் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

மிராமிச்சி (Miramichi) நகருக்கு தென்மேற்கு பகுதியில் 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அட்லாண்டிக் நிறுவகம் (Atlantic Institution) என்ற சிறைச்சாலையிலேயே இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறைச்சாலையில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஓலிவர் (Oliver -32) என்ற கைதி தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

கடுமையான தாக்குதல் நடத்தியமை, உடலில் காயம் ஏற்படுத்தியமை, ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்தமை தொடர்பான வழக்கில் அவருக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதன்படி 2014 ஆம் ஆண்டும் டிசம்பர் 23 ஆம் திகதியில் இருந்து ஒலிவர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் திடீரென ஓலிவர் உயிரிழந்துவிட்டதாக சிறை பாதுகாவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மர்மமான முறையில் இடம்பெற்ற உயிரிழப்பு தொடர்பாக கைதியின் குடும்பத்தாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஓலிவரின் மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும் என்று கனேடிய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் Correctional Service Canada அமைப்பு தெரிவித்துள்ளது