Reading Time: < 1 minute

அமெரிக்காவுடனான உறவை தியாகம் செய்துவிட்டு சீனாவை நோக்கி நகர வேண்டாம் என கனடாவின் முன்னாள் இராணுவ தளபதி எச்சரித்துள்ளார்.

Tamil Business Directory

அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள சூழலில், புதிய வர்த்தகக் கூட்டாளிகளைத் தேடி வரும் கனடா அரசுக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கனடிய பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைமைப் அதிகாரி ஓய்வுபெற்ற ஜெனரல் வேய்ன் எய்ர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பூகோளம் மற்றும் எல்லைகளின் முக்கியத்துவத்தை நாம் மறந்துவிடக் கூடாது. நாம் அண்டை நாடுகள், ஒரே கண்டத்தைப் பகிர்ந்து கொள்கிறோம், இந்த உண்மை எனவும் மாறப்போவதில்லை என ஜெனரல் எய்ர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவுடன் தற்போது அரசியல் ரீதியான சவால்கள் இருந்தபோதிலும், இரு நாடுகளும் இராணுவத் துறையில் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் உறவுகளில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், அவசர காலத்தில் தொலைபேசியை எடுத்து உணர்வுபூர்வமான விடயங்களை விவாதிக்கும் அளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால உறவில் முதலீடு செய்வது நாட்டின் தேசிய நலனுக்கு உகந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் பிரதமர் மார்க் கார்னி இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்து, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் ஒரு புதிய இருதரப்பு மூலோபாயக் கூட்டாண்மையை உருவாக்கிக் கொண்டதைத் தொடர்ந்தே முன்னாள் இராணுவ தளபதியின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.