Reading Time: < 1 minute

கனடாவின் ஸ்காப்றோ பகுதியில் தாத்தா பாட்டியுடன் இருந்த குழந்தை ஒன்றை கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

29 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.

சிறுவர்களுக்கான வண்டியில் அழைத்துச் செல்லப்பட்ட குழந்தையை முதியவர்கள் இடமிருந்து குறித்த நபர் பறித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையை கடத்திச் சென்றவரை துரத்திச் சென்ற வயோதிபர்களை சந்தேக நபர் தாக்கியிருந்தார். இதனால் வயோதிபர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு தப்பிச்சென்ற சந்தேக நபரை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.

டேவிட் கோன்ஸாலெஸ் ரென்டோன் என்ற நபரே இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.