Reading Time: < 1 minute

கனடாவில், கடந்த மாதம் விபத்தொன்றில் உயிரிழந்த இந்தியர் ஒருவரைக் குறித்த புதிய தகவல்கள் சில வெளியாகியுள்ளன.

Tamil Business Directory

கடந்த மாதம் 19ஆம் திகதி, இரவுப்பணி முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஜஸ்விந்தர் சிங் (38) பயணித்த கார், பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பேருந்து ஒன்றுடன் மோதியது.

அந்த விபத்தில், காரில் பயணித்த சிங்கும், கார் சாரதியும் உயிரிழந்தனர். அவர்களுடன் காரில் பயணித்த மூன்று பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், இந்தியாவிலுள்ள பஞ்சாபைச் சேர்ந்த சிங், அவரது மனைவி இஷா, தம்பதியரின் மகள்களான சச்சிக்கா (10) மற்றும் ப்ரிஷா (4) ஆகிய அந்தக் குடும்பத்தினர், அக்டோபர் மாதம்தான் இந்தியாவிலிருந்து கனடாவின் பிராம்ப்டனுக்கு புலம்பெயர்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

சிங் சமீபத்தில்தான் பணியில் சேர்ந்துள்ள நிலையில், கனடாவில் ஒரு புதுவாழ்வைத் துவக்கும் அவரது கனவு வெகு சீக்கிரம் முடிவுக்கு வந்துவிட்டது.

கனடா வந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில், கணவனை இழந்து தவிக்கும் இஷாவுக்கும், தந்தையை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்கும் ஆறுதல் கூற யாரால் முடியும்!