Reading Time: < 1 minute

தெற்காசிய நாடுகளைச் ​சேர்ந்த இரண்டு பெண்கள் கனடாவின் பிராம்ப்டன் (Brampton) பகுதியில் வைத்து ஒருவார இடைவௌியில் காணாமல் போயுள்ளனர்

Tamil Business Directory

நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பரிந்தர் கவுர் (Barinder Kaur -34) என்ற பெண் பிராமலியா (Bramalea) தெரு பகுதியில் வைத்து மதியம் 1 மணியளவில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அவர் திடீரென காணாமல போனதால் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.

5 அடி 1 அங்குலம் உயரம் கொண்ட அவர் ஒரு தெற்காசியர் என்றும் பழுப்பு நிறக் கண்களும், நீண்ட கருமையான கூந்தலையும் கொண்டவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, லவ்லீன் தவான் (Lovleen Dhawan (27) என்ற இளம்பெண்ணும் கடந்த 14 ஆம் திகதி மதியம் 1 மணியளவில் McLaughlin தெரு பகுதியிலிருந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரும் ஒரு தெற்காசியரென்றும், மெலிவான உடல்வாகும், 5 அடி 7 அங்குலம் உயரமும், தோள்பட்டை வரை நீண்ட கருமையான தலைமுடியும் கொண்டவர் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

லவ்லீனுக்கு சொந்தமான கார் திறப்புக்களை கண்டெடுத்த மலையேற்றத்திற்கு சென்ற இரண்டு இளம்பெண்கள் அவற்றை அங்கிருந்த சிலரிடம் ஒப்படைத்துச் சென்றுள்ளனர்.

கனேடிய பொலிசார் குறித்த இரண்டு இளம்பெண்களையும் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.