Reading Time: < 1 minute

கனடாவில் இடம்பெற்ற குதிரை வண்டி விபத்தில் சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

குதிரை வண்டியொன்றும் பயணிகள் வாகனமொன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குதிரை வண்டியில் பயணம் செய்த 13 வயதான ஒரு சிறுவர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த குதிரை வண்டியில் பயணம் செய்த எட்டு வயதான மற்றுமொரு சிறாரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பயணிகள் வாகனத்தைச் செலுத்திய சாரதியும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் வடமேற்கு வாட்டர்லூ பிராந்தியத்தின் நோர்த் பர்த் நகராட்சியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.