உக்ரைனுடன் இணைந்து ட்ரோன் தயாரிக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கனடா ஈடுபட்டதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் கனடா அமைதியை விரும்புவதாகக் கூறிக்கொண்டாலும், நடைமுறையில் “போர்ப் பிரியன்” (warmonger) போல நடந்து கொள்கிறது என ரஷ்ய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மரியா சகாரோவா குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைனின் Airlogix நிறுவனமும், ஒன்டாரியோவின் Hamilton நகரைத் தளமாகக் கொண்ட Sentinel R&D நிறுவனமும் இணைந்து ட்ரோன்கள் தயாரிக்கும் ஒப்பந்தத்தை கனடா அண்மையில் அறிவித்தது. இவ்வாறு கனடாவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள், உக்ரைன் போர்க்கள முன்னணிப் பகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த ரஷ்யா, இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள கனடிய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ முகவரியை பகிரங்கமாக வெளியிடப்போவதாக எச்சரித்துள்ளது. மேலும், இந்த நடவடிக்கையை ரஷ்யா தனது ராணுவ மற்றும் அரசியல் திட்டமிடல்களில் கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளித்த கனடாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி, ரஷ்யாவின் மிரட்டல்களுக்கு கனடா ஒருபோதும் அஞ்சாது என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.