Reading Time: < 1 minute

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (CUSMA) மேலும் நீட்டிக்கத் தனக்கு விருப்பமில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து நான் சிந்திக்கவில்லை எனவும் உண்மையைச் சொல்வதானால், இந்த ஒப்பந்தம் இல்லாமலேயே அமெரிக்கா மிகச் சிறப்பாகச் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கனடாவிடமிருந்தோ அல்லது மெக்சிகோவிடமிருந்தோ அமெரிக்காவிற்குத் தேவையான பொருட்கள் எதுவும் கிடையாது ஆனால் அவர்களுக்குத் தேவையான அனைத்தும் எங்களிடம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள ஒப்பந்தத்தின்படி, எதிர்வரும் ஜூலை 1-ஆம் திகதிக்குள் மூன்று நாடுகளும் இந்த வர்த்தக உடன்படிக்கையை மேலும் 16 ஆண்டுகளுக்கு நீட்டிக்க விரும்புகிறதா அல்லது ஆண்டுதோறும் மறுஆய்வு செய்யும் முறைக்கு மாறுகிறதா என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடா ஏற்கனவே இந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், டிரம்பின் இந்த திடீர் கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய ‘நாஃப்டா’ (NAFTA) வர்த்தக ஒப்பந்தம் தான் தான் பார்த்ததிலேயே மிக மோசமான ஒப்பந்தம் என்று குறிப்பிட்ட டிரம்ப், தற்போதைய CUSMA ஒப்பந்தத்தில் தனக்குப் பிடித்த ஒரே விஷயம் அதன் ‘முடிவுறுத்தும் அதிகாரம்’ தான் என தெரிவித்துள்ளார்.

6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்து, தேவைப்பட்டால் ரத்து செய்யும் விதியை நான் இதில் சேர்த்தேன். அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது” என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.