Reading Time: < 1 minute

ரொரன்ரோ மிட்டவுன் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து பாரதூரமான காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துவிட்ட நிலையில், குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

Yonge Streetற்கு கிழக்கே, Davisville Avenueவில் அமைந்துள்ள குறித்த அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து நேற்று முன்தினம் பிற்பகல் 12:30 அளவில் அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைத்ததை அடுத்து அவர்கள் அங்கு விரைந்ததுள்ளனர்.

தாங்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்த வேளையில், குறைந்தது இருவர், வெளியே தெரியும் படியான பலத்த காயங்களுடன் காணப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் இருந்ததாகவும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் அங்கிருந்து ஆண் ஒருவரும் பெண் ஒருவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், எனினும் சிறிது நேரத்தில் இருவரும் உயிரிழந்து விட்டதாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.