Reading Time: < 1 minute

கனடாவின் குடியிருப்பு தொகுதி ஒன்றில் பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

Tamil Business Directory

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

இரண்டு ஆண்கள் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த தகவல்களின் அடிப்படையில் டொரன்டோ போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

ஸ்காப்ரோ டான்சிங் மற்றும் மார்னிங் சைட் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்பு தொகுதி ஒன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தினால் பொது மக்களுக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் கிடையாது என போலீசார் அறிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.