Reading Time: < 1 minute

கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Tamil Business Directory

லோரன்ஸ் அவன்யூ மற்றும் ஹோர்டன் பார்க் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

சமப்வ இடத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.