Reading Time: < 1 minute

கனடாவின் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

மோட்டார் சைக்கிள் ஒன்று வாகனம் ஒன்றில் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் டொரன்டோ போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கிங்ஸ்டன் மற்றும் ஷெப்பர்ட் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயம் அடைந்த குறித்த நபர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த வாகன விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

இந்த விபத்துடன் தொடர்புடைய மற்றைய வாகன சாரதி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.