Reading Time: < 1 minute

வாகனத்தால் மோதுண்டு பாதசாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு வேளையில் ஸ்காபரோவில் இடம்பெற்றுள்ளது.

Tamil Business Directory

Kingston வீதி மற்றும் Morningside Avenue பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8:40 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வாகனத்தினால் மோதுண்ட பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே தரித்திருந்ததாக தெரிவித்துள்ள ரொரன்ரோ காவல்துறையினர், சம்பவம் இடம்பெற்ற பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த ஆண்டில் கடந்த 21ஆம் திகதி வரையிலும் ரொரன்ரோ நகரில் 19 பாதசாரிகள் வாகனத்தினால் மோதுண்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.